News in English
  • முகப்பு
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • சினிமா
  • விளையாட்டு
  • ஏனையவை
    • அறிவியல்
    • வணிகம்
    • ஆன்மீகம்
    • இன்றைய பார்வை
    • சிறப்பு ஞாயிறு
    • ஆதவனின் அவதானம்
    • விரிவாக்கல் பிரிவு
    • மரண அறிவித்தல்

தலைப்பு செய்திகள்

  • T-20 போட்டியில் 278 ஓட்டங்களை எடுத்து ஆப்கானிஸ்தான் அணி உலக சாதனை!
  • மீண்டும் தமிழுக்கு வரும் அஜித், விக்ரம் பட நாயகி
  • திராவிடர் கழகத்தின் தலைவராக கலிபூங்குன்றன் தேர்வு!
  • மஹிந்தவை மீறி தமிழர்களுக்கு ஒருபோதும் தீர்வு கிடையாது – திஸ்ஸ விதாரண
  • மக்களவை தேர்தல்: 25ம் திகதி முதல் விருப்பமனு விநியோகம் – தி.மு.க.
  1. முகப்பு
  2. இலங்கை
  3. 2020 ஜனாதிபதி தேர்தல் வேட்பாளர் ரணில்! – திகாம்பரம் உறுதி

2020 ஜனாதிபதி தேர்தல் வேட்பாளர் ரணில்! – திகாம்பரம் உறுதி

In இலங்கை     August 13, 2018 1:59 am GMT     0 Comments     1584     by : Yuganthini

எதிர்வரும் 2020ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க வேட்பாளராக களமிறங்க வேண்டுமென மலையக புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரம் தெரிவித்துள்ளார்.

நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியின் கீழ் பூண்டுலோயா, டன்சினன் தோட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள மகாத்மா காந்திபுரம் கிராமத்தை பயனாளிகளுக்கு கையளிக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். அவர் தொடர்ந்து கூறுகையில்,

“எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில், பிரதமர் ரணில் வேட்பாளராக போட்டியிட்டால் மலையகத்திலுள்ள பெருந்தோட்ட மக்கள்  அனைவரும் அவருக்கு முழு ஆதரவினை வழங்கி வெற்றியடைய செய்ய வேண்டுமென்பதே எனது ஆசையாகும்.

மேலும் பெருந்தோட்ட மக்களுக்கு வேண்டிய அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்து கொடுக்கக்கூடிய வல்லமை பிரதமரிடமே காணப்படுகின்றது.

அதாவது கடந்த 2015 ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதி தேர்தல் பிரசார நடவடிக்கையின்போது பிரதமர் ரணில் விக்ரமசிங்க, தலவாக்கலையில் நடைபெற்ற கூட்டமொன்றில், பெருந்தோட்ட மக்களுக்கு சொந்தமாக காணிகள் வழங்கப்படுமென மிகவும் உறுதியுடன் கூறியிருந்தார்.

இந்தவகையில் 2015ஆம் ஆண்டு பெருந்தோட்ட மக்களுக்கு கொடுத்த அவ்வாக்குறுதியினை நிறைவேற்றும் நடவடிக்கைகளை தற்போது முன்னெடுத்து வருகின்றமையை அவதானிக்க கூடியதாக இருக்கின்றது.

ஆகையால் 2020 ம் ஆண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவே ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட வேண்டும்” என  பழனி திகாம்பரம் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

 


 

தொடர்புடைய செய்திகள்

  • பிரதமரின் கருத்தை தமிழர்கள் ஒருபோதும் ஏற்க மாட்டார்கள் – ரவிகரன்  

    யுத்தம் முடிவடைந்தும் தமிழர்களின் பிரச்சினைகள் தீர்க்கப்படாத நிலையில், மறப்போம் மன்னிப்போம் என பிரதம

  • இலங்கை – சீன உறவுகளை விரிவுபடுத்துவது குறித்து புதுடெல்லியில் பேச்சு!  

    இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையிலான உறவுகளை விரிவுபடுத்துவது தொடர்பாக, இரண்டு நாடுகளுக்கும் இடையில் ப

  • 128-குள் தென்னாப்பிரிக்கா சுருண்டது – இலங்கைக்கு 197 ஓட்டங்கள் வெற்றி இலக்கு  

    இலங்கை – தென்னாபிரிக்க அணிகளுக்கிடையிலான இரண்டாவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸ

  • பொறுப்புக்கூறல் இல்லாத நல்லிணக்கம் நின்றுநிலைக்குமா?  

    இலங்கையில் ஆயுதப்போராட்டம், மிலேச்சத்தனமான முறையில் முடிவிற்கு கொண்டுவரப்பட்டு எதிர்வரும் மே மாதத்து

  • காணாமலாக்கப்பட்டோர் விவகாரம் – ஐ.நா.வில் இலங்கை குறித்து ஆய்வு!  

    பலவந்தமாக அல்லது வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பான ஐ.நா. பணிக்குழுவில் இலங்கை குறித்தும் ஆரா


#Tags

  • Palanithigamperam
  • ranil
  • Sri lanka
  • இலங்கை
  • பழனி திகாம்பரம்
  • ரணில்
    பிந்திய செய்திகள்
  • T-20 போட்டியில் 278 ஓட்டங்களை எடுத்து ஆப்கானிஸ்தான் அணி உலக சாதனை!
    T-20 போட்டியில் 278 ஓட்டங்களை எடுத்து ஆப்கானிஸ்தான் அணி உலக சாதனை!
  • மீண்டும் தமிழுக்கு வரும் அஜித், விக்ரம் பட நாயகி
    மீண்டும் தமிழுக்கு வரும் அஜித், விக்ரம் பட நாயகி
  • வர்த்தகர்கள் கொலை – எதிர்ப்பு போராட்டம் கைவிடப்பட்டது!
    வர்த்தகர்கள் கொலை – எதிர்ப்பு போராட்டம் கைவிடப்பட்டது!
  • உலக சாரணியர் தினம் அனுஷ்டிப்பு
    உலக சாரணியர் தினம் அனுஷ்டிப்பு
  • நாடுமுழுவதும் மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்பு – 3711 பேர் கைது!
    நாடுமுழுவதும் மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்பு – 3711 பேர் கைது!
  • பூரண ஹர்த்தால் போராட்டத்திற்கு தமிழ் தலைமைகள் ஆதரவு
    பூரண ஹர்த்தால் போராட்டத்திற்கு தமிழ் தலைமைகள் ஆதரவு
  • முதலாவது ரோபோ முழங்கால் அறுவை சிகிச்சை வெற்றி!
    முதலாவது ரோபோ முழங்கால் அறுவை சிகிச்சை வெற்றி!
  • அமெரிக்காவில் உருவாகும் தனுஷ் – சுப்புராஜ் படம்
    அமெரிக்காவில் உருவாகும் தனுஷ் – சுப்புராஜ் படம்
  • 7 பேரின் விடுதலையைக் கோரி முதலமைச்சருக்கு நளினி கடிதம்
    7 பேரின் விடுதலையைக் கோரி முதலமைச்சருக்கு நளினி கடிதம்
  • அடிமை எதிர்ப்பு அமைப்பின் புதிய ஆணையாளராக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி
    அடிமை எதிர்ப்பு அமைப்பின் புதிய ஆணையாளராக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி
  • வானொலி
  • தொலைக்காட்சி

Copyright © 2019 Athavan News. All rights reserved.