பிரதம நீதியரசராக சட்டமா அதிபர் ஜயந்த ஜயசூரிய

பிரதம நீதியரசராக சட்டமா அதிபர் ஜயந்த ஜயசூரிய நியமிக்கப்பட்டுள்ளார்.
அரசியலமைப்பு பேரவை இன்று(வெள்ளிக்கிழமை) கூடியது.
இதன்போதே ஏகமனதாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அண்மையில் பிரதம நீதியரசராக நியமிக்கப்பட்ட நளின் பெரேரா ஓய்வு பெற்றுள்ளதையடுத்து ஜயந்த ஜயசூரிய அந்தப் பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.
அதேநேரம் சுலந்த விக்ரமரத்னவை புதிய கணக்காளர் நாயகமாக நியமிக்கவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.