பிரான்ஸில் ஃபைஸர்- பயோன்டெக் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட ஒன்பது பேர் உயிரிழப்பு!

பிரான்ஸில் ஃபைஸர்- பயோன்டெக் கொரோனா வைரஸ் தடுப்பூசி செலுத்திக்கொண்ட ஒன்பது பேர் உயிரிழந்துள்ளனர்.
எனினும், இந்த உயிரிழப்பிற்கும் கொரோனா வைரஸ் தடுப்பூசிக்கு தொடர்பில்லை என மருந்துகளிற்கான தேசிய நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.
வயது முதிர்ந்தவர்களான இவர்கள் மற்றவர்களின் உதவியுடன் தங்கி வாழும் முதியோர் இல்லங்களான EHPADயை சேர்ந்தவர்கள் எனவும் பல தீவிர நோய்களிற்காகச் சிகிச்சை எடுத்துக் கொண்டிருந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுவரை தடுப்பூசிகள் போடப்பட்டுள்ள 823.000 பேரில், இதுவரை 135 பக்கவிளைவுகள் மட்டுமே பதிவாகி உள்ளன.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.