பிரான்ஸில் இதுவரை இரண்டரை மில்லியன் மக்களுக்கு கொவிட்-19 தடுப்பூசி!

பிரான்ஸில் இதுவரை இரண்டரை மில்லியன் மக்களுக்கு கொரோனா வைரஸ் (கொவிட்-19) தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக சுகாதாரப் பொதுத் தலைமையகம் அறிவித்துள்ளது.
கடந்த ஆண்டு டிசம்பர் 27ஆம் திகதி முதல் நேற்று (புதன்கிழமை) வரையிலான தரவுகளே இதுவாகும்.
குறிப்பாக 2,056,572 பேர் முதல் டோஸ் அளவை பெற்றுள்ளதாகவும் 443,148 பேர் இரண்டாவது டோஸ் அளவை பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இதில் 60.2 சதவீத பெண்களும் 39.7 சதவீத ஆண்களும் அடங்குகின்றனர்.
தடுப்பூசி போடப்பட்டவர்களில் 42.5 சதவீதம் 80 வயதிற்கு மேற்பட்டவர்களும், 19.1 சதவீதத்தினர் 75 வயதிற்கும் 79 வயதிற்கும் இடைப்பட்டவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.