பிரான்ஸில் கொரோனாவினால் மேலும் 21 ஆயிரம் பேர் பாதிப்பு, 193 பேர் உயிரிழப்பு
In ஐரோப்பா January 17, 2021 7:43 am GMT 0 Comments 1443 by : Jeyachandran Vithushan

பிரான்ஸில் நேற்று (சனிக்கிழமை) மட்டும் மேலும் 21 ஆயிரத்து 406 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனை அடுத்து அங்கு கொரோனா தொற்று உறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 28 இலட்சத்து 94 ஆயிரத்து 347 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை கடந்த 24 மணிநேரத்தில் மேலும் 193 பேர் உயிரிழந்துள்ள நிலையில் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கையும் 70 ஆயிரத்து 142 ஆக உயர்ந்துள்ளது.
உலகளவில் கொரோனா தொற்று உறுதியான நாடுகளின் வரிசையில் பிரான்ஸ் 6 ஆவது இடத்தில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.