பிரான்ஸில் முதற்கட்டத் தடுப்பூசி போடும் பணிகள் இடைநிறுத்தம்!

பிரான்ஸில் பெருமளவான கொரோனா தடுப்பூசி விநியோகத் தட்டுப்பாடு நிலவுவதால், நாடு முழுவதும் முதற்கட்டத் தடுப்பூசி போடும் பணிகள் இடைநிறுத்தப்பட்டுள்ளது
கொரோனாத் தடுப்பூசிகள் போடப்பட ஆரம்பித்ததில் இருந்து, நேற்று இரவு வரை 1.349.517 பேரிற்குக் கொரோனாத் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன.
சீரான விநியோகம் இருந்திருந்தால், நேற்று இரவு 1.400.000 பேரிற்கு அதிகமாகக் கொரோனா தடுப்பூசிகள் போட்பட்டிருக்கும்.
பெப்ரவரி மாத இறுதிக்குள் 2.5 மில்லியன் பேரிற்குத் தடுப்பூசிகள் போடப்பட்டு விடும் எனவும், பிரான்ஸ் அரசாங்கத்தின் தொடர்பாளர் கப்ரியல் அத்தால் தெரிவித்துள்ளார்.
அதாவது 1 மில்லியன் பேரிற்கு முதற்கட்ட அலகு தடுப்பூசியும், 1.5 மில்லியன் பேரிற்கு இரண்டாவது அலகு தடுப்பூசியும் பெப்ரவரி இறுதிக்குள் போடப்பட்டு விடும் என்பதே இலக்காக உள்ளது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.