பிரான்ஸ் ஜனாதிபதியைத் தொடர்ந்து ஸ்லோவேக்கியா பிரதமருக்கு கொரோனா!

ஐரோப்பிய ஒன்றிய கூட்டத் தொடரில் கலந்துக்கொண்ட நாட்டுத் தலைவர்களில், ஸ்லோவேக்கியாவின் பிரதமர் ஐஹோர் மடோவிக்கும் கொரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
முன்னதாக பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோனுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டிருந்தது.
ஆகையால், கடந்த 10 மற்றும் 11ஆம் திகதிகளில் பெல்ஜியம் நாட்டின் பிரசெல்ஸ் நகரில் நடைபெற்ற ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் கூட்டத்தொடரில் கலந்துக்கொண்ட தலைவர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தனிமைப்படுத்திக்கொண்டனர்.
இந்தநிலையில், நேற்று (வெள்ளிக்கிழமை) இந்த கூட்டத் தொடரில் கலந்துக்கொண்ட 47வயதான ஸ்லோவேக்கியா பிரதமர் ஐஹோர் மடோவிக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதியானது.
கொரோனா உறுதியானதையடுத்து ஐஹேர் மடோவிக் தன்னைத்தானே தனிமைப்படுத்திக்கொண்டுள்ளார். பிரதமர் தொடர்ந்து மருத்துவ கண்காணிப்பில் இருப்பார் எனவும் ஆனாலும், அவர் தனது அலுவலகப்பணிகளை தொடர்ந்து மேற்கொள்வார் என ஸ்லோவேக்கியா அரசாங்கம் தெரிவித்துள்ளது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.