பிரான்ஸ் மேதினப் பேரணியில் பதற்றம்: கண்ணீர்ப்புகை வீச்சு!

பரிஸில் நடைபெற்ற மேதினப் பேரணியில் பிரெஞ்சு ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோனின் கொள்கைகளுக்கு எதிராகத் திரண்டவர்களா மத்தியில் ஏற்பட்ட கலவரத்தைக் கட்டுப்படுத்துவதற்காக பொலிஸாரால் கண்ணீர்ப்புகை வீசப்பட்டது.
முகமூடிகளை அணிந்தபடியும் யெல்லோ வெஸ்ட்களை அணிந்தபடியும் பேரணியில் கலந்து கொண்டவர்களால் பொலிஸார்மீது முன்னெடுக்கப்பட்ட தாக்குதலைத் தொடர்ந்தே பொலிஸார் கண்ணீர்ப்புகை வீசும் நிலைக்குச் சென்றதாகத் தெரியவருகிறது.
இந்த ஆர்ப்பாட்டங்களின் விளைவாக இதுவரை 165 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
போராட்டங்கள் இடம்பெறும் பகுதியில் அமைந்துள்ள சுமார் 580 கடைகள் மற்றும் உணவகங்களை மூடுமாறு பொலிஸார் அறிவித்துள்ளனர்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.