பிராம்ப்டன் விபத்தில் உயிரிழந்த பெண் அடையாளங்காணப்பட்டார்!

ரொறன்ரோ- பிராம்ப்டனில் இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்த பெண்னை, பொலிஸார் அடையாளங் கண்டுள்ளனர்.
உயிரிழந்த பெண், 16வயதான டயானா மனன் என பீல் பிராந்திய பொலிஸார் அடையாளம் காணப்பட்டனர்.
தி கோர் வீதிக்கு அருகிலுள்ள குயின் வீதி மற்றும் செர்ரிகிரெஸ்ட் ட்ரைவ் பகுதியில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை 12:20 மணியளவில் இந்த விபத்து சம்பவித்துள்ளது.
இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த அவசர குழுவினர், பதின்ம வயது பெண்னொருவரை உயிரபத்தான காயங்களுடன் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். எனினும் அவர் உயிரிழந்துவிட்டார்.
ஆனால், விபத்தை ஏற்படுத்திய சாரதி, பாதிக்கப்பட்டவருக்கு உதவாமல் அந்த இடத்தை விட்டு தப்பி ஓடிவிட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
மேலும், இவ்விபத்து குறித்து மேலதிக தகவல் எதனையும் வெளியிடாத பொலிஸார், இதுகுறித்து தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.