பிரிட்டிஷ் கொலம்பியாவில் கூட்டங்களுக்கான தடை அடுத்த மாதம் வரையில் தொடரும்!

பிரிட்டிஷ் கொலம்பியாவில் கொரோனா வைரஸ் தொற்று பரவல் தீவிரமடைந்து வருவதால், கூட்டங்களுக்கான தடை அடுத்த மாதம் வரையில் தொடரும் என மாகாண சுகாதார அலுவலகம் தெரிவித்துள்ளது.
தற்போதைய சுகாதார உத்தரவுகளை எதிர்வரும் பெப்ரவரி மாதம் பிப்ரவரி 5 ஆம் திகதி நள்ளிரவு வரை நீடிப்பதாக மாகாண சுகாதார அலுவலர் டாக்டர் போனி ஹென்றி அறிவித்துள்ளார்.
ஒவ்வொரு நகரத்திலும் ஒரு சிலர் விதிகளை மீறினால், அது அனைவருக்கும் ஆபத்தை ஏற்படுத்துகின்றது என ஹென்றி கூறினார்.
இதுதொடர்பாக அவர் மேலும் கூறுகையில், ‘இந்த வைரஸ் காரணமாக பல மாதங்களாக நாம் நம் நண்பர்களைப் பார்க்கவில்லை. இது இப்போது நமக்கு ஆபத்தான நேரம். தடுப்பூசி போட ஆரம்பமாகி விட்டதற்காக நம் பாதுகாப்பை நாம் விட்டுவிட முடியாது. இது நம் குளிர்காலம். ஆனால் வசந்த காலம் வரும் என்று நமக்குத் தெரியும்’ என கூறினார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.