பிரித்தானியப் பத்திரிகைகளின் தலைப்புச் செய்திகளாக இலங்கைத் தாக்குதல்கள்
In இங்கிலாந்து April 23, 2019 2:11 pm GMT 0 Comments 7132 by : S.K.Guna

இலங்கையில் நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதல்கள் குறித்த செய்திகள் பிரித்தானியப் பத்திரிகைகளின் தலைப்புச் செய்திகளாக மாறியுள்ளன.
38வெளிநாட்டுப் பிரஜைகள் உட்பட 321 பேர் தேவாலயங்கள் மற்றும் நட்சத்திர விடுதிகளில் நடந்த பயங்கரவாதத் தாக்குதல்களில் சிக்கி உயிரிழந்தனர். 500 க்கும் அதிகமானவர்கள் படுகாயமடைந்தனர்.
கொழும்பு கொச்சிக்கடை அந்தோனியார் தேவாலயம், நீர்கொழும்பு சென்ற் செபஸ்ரியன் தேவாலயம், மட்டக்களப்பு சீயோன் தேவாலயம், கொழும்பு சங்ரி-லா மற்றும் கிங்ஸ்பறி, சினமன் கிரான்ட் நட்சத்திர விடுதிகள் ஆகியவற்றில் ஞாயிற்றுக்கிழமை ஒரேநேரத்தில் பயங்கரவாதிகள் தற்கொலைக்கு குண்டுத் தாக்குதல்களை மேற்கொண்டனர்.
இந்தத் தாக்குதல்களில் 8 பிரித்தானியப் பிரஜைகள் கொல்லப்பட்டுள்ளனர். டென்மார்க், சுவிஸ், ஸ்பெய்ன், நெதர்லாந்து, இந்தியா, அவுஸ்திரேலியா, துருக்கி ஆகிய நாடுகளின் பிரஜைகளும் தாக்குதல்களில் கொல்லப்பட்டுள்ளனர்.
தாக்குதல்கள் இடம்பெற்றத்தைத் தொடர்ந்து தவறான தகவல்கள் பரவக்கூடாது என்பதற்காக இலங்கையில் சமூக வலைத்தளங்கள் தற்காலிகமாக முடக்கப்பட்டுள்ளன.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.
#Tags
- Australian
- Batticaloa
- bombings
- British
- churches
- Colombo
- Danish
- Dutch
- Easter Sunday
- hotels
- indian
- Negombo
- Spanish
- Sri lanka
- Swiss
- Turkish
- அந்தோனியார் தேவாலயம்
- அவுஸ்திரேலியா
- இந்தியா
- இலங்கை
- கொச்சிக்கடை
- கொழும்பு
- சங்ரி- லா
- சீயோன் தேவாலயம்
- சுவிஸ்
- டென்மார்க்
- துருக்கி
- தேவாலயங்கள்
- நெதர்லாந்து
- பத்திரிகை
- பயங்கரவாதத் தாக்குதல்கள்
- பிரித்தானியா
- மட்டக்களப்பு
- ஸ்பெய்ன்