பிரித்தானியாவின் பயணப் பட்டியலிருந்து ஐக்கிய அரபு அமீரகம் நீக்கம்!
In இங்கிலாந்து January 12, 2021 7:45 am GMT 0 Comments 1789 by : Anojkiyan

கொவிட்-19 தொற்று அதிகரிப்புக்கு மத்தியில் ஐக்கிய அரபு அமீரகம், பிரித்தானியாவின் பயணப் பட்டியலிருந்து நீக்கப்படுகிறது.
அதாவது செவ்வாயன்று 04:00 மணிக்குப் பிறகு ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து வரும் எவரும் இப்போது 10 நாட்களுக்கு சுயமாக தனிமைப்படுத்தப்பட வேண்டும் என்று போக்குவரத்து செயலாளர் கிராண்ட் ஷாப்ஸ் கூறினார்.
கடந்த ஏழு நாட்களில் ஐக்கிய அரபு அமீரகத்தில் கொவிட் தொற்றுகள் 52 சதவீதம் உயர்ந்துள்ளதாக பிரித்தானிய அதிகாரிகள் கூறுகின்றனர்.
கடந்த ஏழு நாட்களில் ஐக்கிய அரபு அமீரகத்தில், வெளிநாட்டு பயணிகளின் தொற்றுகளின் எண்ணிக்கையில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு இருப்பதாக கூறப்படுகின்றது.
ஸ்கொட்லாந்து, ஐக்கிய அரபு அமீரக நகரமான டுபாயை அதன் பாதுகாப்பான பயணப் பட்டியலிலிருந்து நீக்கிய பின்னர் இது வருகிறது.
அமீரகத்துக்கு அத்தியாவசிய பயணத்தைத் தவிர மற்ற அனைவருக்கும் எதிராக ஆலோசனை வழங்க வெளியுறவு அலுவலகம் தனது ஆலோசனையை புதுப்பித்துள்ளது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.