பிரித்தானியாவிற்கான பயணக் கட்டுப்பாடுகள் தளர்வு
In இலங்கை February 17, 2021 1:47 pm GMT 0 Comments 1460 by : Jeyachandran Vithushan

உடன் அமுலுக்கு வரும் வகையில் பிரித்தானியாவில் இருந்து இலங்கை வரும் பயணிகளுக்கு விதிக்கப்பட்ட தற்காலிக பயணக் கட்டுப்பாடு நீக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் இந்த முடிவு எட்டப்பட்டதாக வெளிவிவ கார அமைச்சு அறிவித்துள்ளது.
புதிய கொரோனா மாறுபாட்டின் காரணமாக அரசாங்கம் பிரித்தானியாவிற்கு தற்காலிக பயணத் தடையை அறிமுகப்படுத்தியது.
இந்நிலையில் பிரித்தானியாவில் இருந்து வருபவர்களுக்கு பி.சி.ஆர் சோதனைகளை மேற்கொண்டு பின்னர் 14 நாட்கள் தனிமைப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை இலங்கை சுற்றுலாத்துறை அறிமுகப்படுத்திய வழிகாட்டுதலின் கீழ் நாட்டுக்குள் பிரித்தானிய சுற்றுலாப் பயணிகள் வருவதற்கு அனுமதிக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.