பிரித்தானியாவிலிருந்து வரும் விமானங்களை ஜனவரி மாதம் வரை இடைநிறுத்தியுள்ளதாக ரஷ்யா அறிவிப்பு!

பிரித்தானியாவிலிருந்து வரும் விமானங்களை ஜனவரி மாதம் வரை ரஷ்யா இடைநிறுத்தியுள்ளதாக ரஷ்ய செய்தி நிறுவனங்கள் தெரிவிக்கின்றன.
கொரோனா வைரஸ் தொற்றை எதிர்ப்பதற்கான மாஸ்கோவை தளமாகக் கொண்ட தலைமையகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
‘மக்கள்தொகையின் ஆரோக்கியத்தைப் பாதுகாப்பதை உறுதி செய்வதற்காக 2021ஆம் ஆண்டு ஜனவரி 12ஆம் திகதி 23:59 மணி நேரம் வரை கட்டுப்பாடுகளின் காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரித்தானியாவில் கொரோனா வைரஸின் புதிய மாறுபாட்டை விஞ்ஞானிகள் கண்டறிந்ததை அடுத்து, டிசம்பர் 22ஆம் திகதி ரஷ்யா ஒரு வார கால விமானத் தடையை அறிமுகப்படுத்தியது.
முன்பை விட அதிக வேகத்தில் பரவும் வகையில் தன்னைத் தகவமைத்துக் கொண்டுள்ள புதிய ரக கொரோனா வைரஸ் தொற்று பிரித்தானியாவில் அடையாளங் காணப்பட்டதையடுத்து 50 நாடுகள் பிரித்தானியாவுடனான விமானப் போக்குவரத்து தடையினை தொடர்ந்தும் பேணி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.