பிரித்தானியாவில் இருந்தும் தடுப்பூசிகளை கொள்வனவு செய்ய அமைச்சரவை அனுமதி
In இலங்கை February 23, 2021 5:29 am GMT 0 Comments 1217 by : Dhackshala

ஒக்ஸ்போர்ட் அஸ்ட்ரா செனகா தடுப்பூசிகளை பிரித்தானியாவின் தாய் நிறுவனத்திடமிருந்து கொள்வனவு செய்வதற்கும் அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
அதன்படி, பிரித்தானியாவில் அஸ்ட்ரா செனகா நிறுவனத்திடமிருந்து 3.5 மில்லியன் கொவிட் -19 தடுப்பூசிகளை அரசாங்கம் கொள்வனவு செய்யவுள்ளது.
மேலும் தடுப்பூசிகளை கொள்வனவு செய்வதற்கு இலங்கையின் அரச ஔடத கூட்டுத்தாபணம் பிரித்தானியாவின் அஸ்ட்ராசெனெகா நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது.
இந்த நிலையில், கொள்முதல் ஒப்பந்தம் குறித்து பதில் சுகாதார அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன முன்வைத்த திட்டத்திற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
இதேநேரம், இந்தியாவின் சீரம் நிறுவகத்திடம் இருந்து 10 மில்லியன் கொவிஸீல்ட் தடுப்பூசிகளை கொள்வனவு செய்வதற்கான கொடுப்பனவை செலுத்துவதற்கான யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
அதேநேரம், உலக சுகாதார ஸ்தாபனத்தின் தடுப்பூசி வழங்கல் வேலைத்திட்டத்தின்கீழ், இலங்கைக்கு தடுப்பூசிகளைப் பெற்றுக்கொள்வதற்கான உடன்படிக்கைக்கும் அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்துள்ளது.
கோவெக்ஸ் தடுப்பூசி செலுத்தல் திட்டத்தின்கீழ், உலக சுகாதார ஸ்தாபனத்தினால், வறிய நாடுகளுக்கு தடுப்பூசிகள் வழங்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.