பிரித்தானியாவில் இருந்து இலங்கையர்களை அழைத்துவரும் நடவடிக்கை இடைநிறுத்தம்
In ஆசிரியர் தெரிவு December 22, 2020 11:16 am GMT 0 Comments 1691 by : Jeyachandran Vithushan

பிரித்தானியாவில் புதிய கொரோனா தொற்று பரவும் நிலையில் அங்கிருந்து இலங்கையர்களை நாட்டுக்கு அழைத்துவரும் நடவடிக்கையை இடைநிறுத்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முடிவு செய்துள்ளார்.
நாளாந்தம் கூடும் கொவிட் தொடர்பான கூட்டத்தில் கொவிட் புதிய வைரஸின் தோற்றம் மற்றும் அதன் பரவல் தொடர்பில் இன்று மேற்கொள்ளப்பட்ட கலந்துரையாடலிலேயெ இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
வெளிநாடுகளில் சிக்கித்தவிக்கும் இலங்கையர்களை நாட்டுக்கு அழைத்துவரும் நடவடிக்கை தொடர்ந்தும் இடம்பெற்று வரும் நிலையில் ஜனாதிபதி குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
அத்துடன் இன்று பிரித்தானியாவில் இருந்து நாட்டிற்கு வருகை தருபவர்களுக்கு பி.சி.ஆர். பரிசோதனை மேற்கொண்டு 14 நாட்கள் ஹோட்டல்களில் தனிமைப்படுத்தப்பட்ட பின்னர் மேலும் 14 நாட்கள் வீடுகளிலும் தனிமைப்படுத்த வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை இன்று (செவ்வாய்க்கிழமை) நள்ளிரவு முதல் பிரித்தானியாவில் இருந்து நாட்டிற்கு வருகை தரும் விமானங்கள் இரத்து செய்யப்படவுள்ளதாக சிவில் விமான சேவைகள் அதிகார சபை அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.