பிரித்தானியாவில் கடும் பனிப்பொழிவு: மக்களுக்கு எச்சரிக்கை
In இங்கிலாந்து January 23, 2019 6:14 am GMT 0 Comments 1612 by : Varshini

பிரித்தானியாவில் கடும் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ள நிலையில், மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இன்று (புதன்கிழமை) 11 மணிவரை இந்த எச்சரிக்கை நீடிக்கப்படுமென வானிலை அவதான நிலையம் அறிவித்துள்ளது.
குறிப்பாக வாகனச் சாரதிகளை மிகவும் அவதானமாக செயற்படுமாறு எச்சரிக்கை விடுவிக்கப்பட்டுள்ளது. நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்றும் கடுமையான பனிப்பொழிவு காணப்படுமென எதிர்வுகூறப்பட்டுள்ளது.
குறிப்பாக நேற்றிரவு பனிப்பொழிவினால் வெப்பநிலை சடுதியாக குறைந்து காணப்பட்டுள்ளது. பெரும்பாலான இடங்களில் பனிக்கட்டிகள் குவிந்து காணப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
பனிப்பொழிவு காரணமாக ஸ்கொட்லாந்து வீதிகளில் நேற்று 125 வாகன விபத்துக்கள் பதிவாகியுள்ளன. இந்நிலையில், மேலதிக அவதானத்துடன் சாரதிகளை செயற்படுமாறு பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.
பலர் தமது வாகனங்களை வீதிகளில் நிறுத்திவிட்டு நடந்து செல்வதையும் அவதானிக்கக்கூடியதாக உள்ளது.
இதேவேளை, மன்செஸ்டர் விமான நிலையத்தில் நேற்று 6 விமான சேவைகள் ரத்துச்செய்யப்பட்டன. சில விமான சேவைகள் தாமதமாகின.
இங்கிலாந்து, வேல்ஸ், வடஅயர்லாந்து மற்றும் மேற்கு ஸ்கொட்லாந்து ஆகியவையே அதிக தாக்கத்தை எதிர்கொண்டுள்ளன.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.