பிரித்தானியாவில் தடுப்பூசி செலுத்திக்கொண்ட 326பேர் உயிரிழப்பு!
In இங்கிலாந்து February 12, 2021 8:42 am GMT 0 Comments 1522 by : Anojkiyan

பிரித்தானியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தடுப்பூசி செலுத்திக் கொண்ட 326பேர் உயிரிழந்துள்ளதாக மருந்து மற்றும் சுகாதார ஒழுங்குமுறை ஆணையம் தெரிவித்துள்ளது.
இதில் ஃபைஸர் நிறுவனம் தயாரித்த தடுப்பூசியை எடுத்துக்கொண்ட 236 பேர் ஒவ்வாமை உள்ளிட்ட காரணங்களால் உயிரிழந்துள்ளனர்.
இதேபோல் ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் தயாரித்த கொரோனா தடுப்பூசியை எடுத்துக்கொண்ட 90 பேரும் உயிரிழந்துள்ளனர்.
இறந்தவர்களில் பெரும்பாலானோர் வயதானவர்கள் என்றும், கொரோனா தடுப்பூசியால்தான் உயிரிழந்தனரா என்பது உறுதியாகவில்லை என்றும் சுகாதாரத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
பிரித்தானியாவில் தற்போதுவரை சுமார் 13 மில்லியன் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக அண்மைய தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.