பிரித்தானியாவில் புதிதாக 57 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா 445 இறப்புகளும் பதிவு!
In இங்கிலாந்து January 3, 2021 9:50 am GMT 0 Comments 2012 by : Jeyachandran Vithushan

பிரித்தானியாவில் நேற்று மட்டும் புதிதாக 57 ஆயிரத்து 725 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
இந்த அதிகரிப்பே நாள் ஒன்றுக்கு அடையாளம் காணப்பட்ட அதிகபட்ச எண்ணிக்கை என்றும் சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்
தொடர்ச்சியாக ஐந்தாவது நாளாக 50,000 க்கும் அதிகமான நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் மொத்த பாதிப்பு 25 இலட்சத்து 99 ஆயிரத்து 789 ஆக உயர்ந்துள்ளது.
மேலும் கடந்த 28 நாட்களுக்குள் கொரோனா தொற்று உறுதியான மேலும் 445 இறப்புகள் சனிக்கிழமையன்று பதிவாகியுள்ளன.
இதனை அடுத்து பிரித்தானியாவில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 74 ஆயிரத்து 570 ஆக அதிகரித்துள்ளது.
டிசம்பர் 28 முதல் பிரித்தானியாவில் கொரோனா தொற்று உறுதியான 23,823 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் இருப்பதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.