பிரித்தானியாவுக்கு செல்லும் அனைவருக்கும் வெள்ளிக்கிழமை முதல் கொவிட்-19 சோதனை முடிவு அவசியம்!
In இங்கிலாந்து January 12, 2021 11:03 am GMT 0 Comments 1926 by : Anojkiyan

பிரித்தானியாவுக்கு செல்லும் அனைவருக்கும் வெள்ளிக்கிழமை 04:00 மணி முதல் கொவிட்-19 சோதனை முடிவுகள் தேவைப்படும்.
பிரித்தானிய நாட்டவர்கள் உட்பட விமானம், ரயில் அல்லது படகு மூலம் வருபவர்கள் தாங்கள் இருக்கும் நாட்டை விட்டு வெளியேறுவதற்கு 72 மணி நேரம் வரை சோதனை செய்ய வேண்டும்.
அரசாங்கத்தின் பயண பட்டியலில் இல்லாத இடங்களிலிருந்து வருபவர்கள் அனைவரும் 10 நாட்களுக்கு சுயமாக தனிமைப்படுத்தப்பட வேண்டும்.
சோதனை கிடைக்கும் மற்றும் திறன் தொடர்பான சிக்கல்கள் உள்ளன, எனவே சில நாடுகளுக்கு ஆரம்பத்தில் விலக்கு அளிக்கப்படும்.
உதாரணமாக, செயின்ட் லூசியா, பார்படாஸ், ஆன்டிகுவா மற்றும் பார்புடா ஆகிய நாடுகளுக்கு ஆறு நாட்களுக்கு இந்த தேவை பொருந்தாது.
பால்க்லேண்ட் தீவுகள், அசென்ஷன் தீவுகள் மற்றும் செயின்ட் ஹெலினா ஆகிய நாடுகளைச் சேர்ந்த பயணிகளுக்கு நிரந்தரமாக விலக்கு அளிக்கப்படுகிறது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.