பிரித்தானியாவுடன் தொடர்ந்தும் நெருக்கமான உறவை எதிர்பார்க்கிறோம்: ஜேர்மன் அதிபர்

பிரெக்சிற்றின் பின்னரும் பிரித்தானியாவுடன் நெருக்கமான உறவை பேண எதிர்பார்ப்பதாக, ஜேர்மன் அதிபர் அங்கேலா மெர்க்கல் தெரிவித்தள்ளார்.
ஜேர்மனியின் ஹனோவர் நகரில் நேற்று (திங்கட்கிழமை) நடைபெற்ற குடிமக்களுடனான சந்திப்பில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அங்கு தொடர்ந்து தெரிவித்த அவர், ”எமது குடிமக்களுக்கு பிரித்தானியாவில் நல்ல வாழ்க்கை நிலையும், கல்வி கற்பதற்கான சிறந்த சூழலும் ஏற்படுத்திக் கொடுக்கப்பட வேண்டும் என எதிர்பார்க்கிறோம்.
நாம் தற்போது இறுதி கட்டத்தில் காணப்படுகின்றோம். எனவே, எமது எதிர்கால உறவு எவ்வாறு அமையப் போகின்றது என்ற அடிப்படை திட்டமேனும் எம்மிடம் காணப்பட வேண்டும்.
என்னை பொருத்தவரையில் இந்த விடயம் மிக முக்கியமானதாகும். என நண்பர்களாக இவ்விடயத்தை சமாளிக்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.