பிரித்தானியா முழுவதும் கடுமையான கட்டுப்பாடுகளுக்கு தயாராகிவரும் மில்லியன் கணக்கான மக்கள்!
In இங்கிலாந்து December 18, 2020 9:47 am GMT 0 Comments 1859 by : Anojkiyan

கொரோனா வைரஸ் தொற்றுகள் அதிகரித்து வரும் கவலைகளுக்கு மத்தியில், பிரித்தானியா முழுவதும் மில்லியன் கணக்கான மக்கள் கடுமையான கட்டுப்பாடுகளுக்கு தயாராகி வருகின்றனர்.
இங்கிலாந்தின் தெற்கு மற்றும் கிழக்கில் முப்பத்தெட்டு மில்லியன் மக்கள் சனிக்கிழமை முதல் மூன்றாம் அடுக்கு கட்டுப்பாட்டு விதிகளுக்குள் நுழையவுள்ளனர்.
வடக்கு அயர்லாந்திலுள்ள மக்கள், டிசம்பர் 26ஆம் திகதி (பொக்ஸிங் டே) முதல் ஆறு வார முடக்கநிலைக்குள் நுழைவர்.
வேல்ஸ் ஏற்கனவே டிசம்பர் 28ஆம் திகதி முதல் ஒரு முடக்கநிலையை அறிவித்திருந்தது. இது ஒவ்வொரு மூன்று வாரங்களுக்கும் மதிப்பாய்வு செய்யப்படும் மற்றும் இறுதி திகதி அறிவிக்கப்படவில்லை.
ஸ்கொட்லாந்தில், பண்டிகை காலத்திற்குப் பிறகு கடுமையான கட்டுப்பாடுகளை நிராகரிக்க முடியாது என்று அரசாங்கம் எச்சரித்துள்ளது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.