News in English
  • முகப்பு
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • சினிமா
  • விளையாட்டு
  • ஏனையவை
    • அறிவியல்
    • வணிகம்
    • ஆன்மீகம்
    • இன்றைய பார்வை
    • சிறப்பு ஞாயிறு
    • ஆதவனின் அவதானம்
    • விரிவாக்கல் பிரிவு
    • மரண அறிவித்தல்

தலைப்பு செய்திகள்

  • புத்தளத்தில் குப்பைகளைக் கொட்டும் திட்டத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம்!
  • பனியில் வரையப்பட்ட மோனாலிசா ஓவியம்!
  • காஷ்மீர் தாக்குதலின் பதிலடிக்கு ஆதரவளிப்போம் – தென்னிந்திய நடிகர் சங்கம்
  • குடிநீர் இன்றி அவதியுறும் இரணைதீவு மக்கள்!
  • ‘இராவணன் திராவிடன்’ நூல் வெளியீடு
  1. முகப்பு
  2. இங்கிலாந்து
  3. பிரித்தானிய அரசியலில் முக்கிய தருணம்: சாதிப்பாரா மே?

பிரித்தானிய அரசியலில் முக்கிய தருணம்: சாதிப்பாரா மே?

In இங்கிலாந்து     January 16, 2019 4:04 am GMT     0 Comments     1528     by : Varshini

பிரித்தானிய அரசியலின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் முக்கிய வாக்கெடுப்பு இன்று இடம்பெறவுள்ளது.

பிரதமர் தெரேசா மே-யினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரெக்ஸிற் திட்டம் 230 பெரும்பான்மை வாக்குகளால் தோல்வியை தழுவியது. இதனைத் தொடர்ந்து பிரதான எதிர்க்கட்சியான தொழிற்கட்சியின் தலைவர் ஜெரமி கோர்பின் நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டுவந்துள்ளார்.

குறித்த தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பே இன்று (புதன்கிழமை) இடம்பெறவுள்ளது.

முன்னாள் பிரதமர் டேவிட் கமரூனின் கூட்டணி ஆட்சியின் போது கொண்டுவரப்பட்ட நிலையான கால நாடாளுமன்ற சட்டத்தின் கீழ், அதன் நடைமுறைகள் பின்பற்றப்படும் முதல் சந்தர்ப்பம் இதுவாகும்.

இன்று மீளவும் கூடவுள்ள நாடாளுமன்ற அமர்வில் எதிர்க்கட்சித் தலைவர் ஜெரமி கோர்பின் முதலில் உரையாற்றவுள்ளார்.

அதன் பின்னர் அரசாங்கத்தின் சார்பில் பிரதமர் தெரேசா மே முக்கிய உரையொன்றை நிகழ்த்தவுள்ளார். அதன் பின்னர் பிரித்தானிய நேரப்படி இரவு 7 மணிக்கு வாக்கெடுப்பு இடம்பெறவுள்ளது.

இந்த வாக்கெடுப்பில் அரசாங்கம் வெற்றிபெற்றால் மாத்திரமே அடுத்தகட்ட நடவடிக்கைக்குச் செல்லலாம். தோல்வியுற்றால், 14 நாட்களுக்குள் அரசாங்கத்தின் மீதான நம்பிக்கையை நிரூபிக்கவேண்டும். இல்லாவிட்டால் முன்கூட்டிய பொதுத் தேர்தலுக்குச் செல்லவேண்டுமென குறித்த சட்டத்தில் கூறப்பட்டுள்ளது.

இந்த இரண்டு வார கால அவகாசத்தில் எத்தனை முறை நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்படலாம் என்ற சட்ட வரம்பு எதுவும் கிடையாது.

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா விலகும் பிரெக்ஸிற் செயற்பாட்டிற்கு கடந்த 2016ஆம் ஆண்டு மக்கள் ஆணை வழங்கியிருந்தனர். பின்னர், இரண்டாவது வாக்கெடுப்பு நடத்தப்படவேண்டுமென பலர் வலியுறுத்திவந்த நிலையில், கடந்த ஐந்து நாட்களாக விவாதிக்கப்பட்டு வந்தது. அதன் பின்னர் நேற்றிரவு வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. குறித்த வாக்கெடுப்பில் பிரதமர் மே-யின் பிரெக்ஸிற் திட்டம் தோல்வியடைந்துள்ள நிலையில், எதிர்க்கட்சி இந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டுவந்துள்ளது.

பிரெக்ஸிற் வாக்கெடுப்பில் ஏற்படுத்தப்பட்ட தோல்வியானது பிரித்தானிய அரசியல் வரலாற்றில், அரசாங்கமொன்று பெற்றுக்கொண்ட மிகப்பெரிய தோல்வியாக அமைந்துள்ளது.

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

 


 

தொடர்புடைய செய்திகள்

  • வெனிசுவேலாவிற்கான மனிதாபிமான உதவிப்பொருட்களுடன் அமெரிக்க இராணுவ விமானங்கள்!  

    வெனிசுவேலாவிற்கான மனிதாபிமான உதவிப்பொருட்களுடன், அமெரிக்க இராணுவ விமானங்கள் கொலம்பிய எல்லையை சென்றடை

  • பிரெக்ஸிற்றிற்காக ஒன்றிணையுமாறு பிரதமர் தெரேசா மே அழைப்பு!  

    தனிப்பட்ட விறுப்பு வெறுப்புகளை மறந்து, பிரெக்ஸிற்றிற்காக ஒன்றிணைந்து ஆதரவை வழங்குமாறு பிரதமர் தெரேசா

  • நேட்டோ-உடனான பிரித்தானியாவின் பாதுகாப்பு ஒத்துழைப்பு பாதிக்காது: உளவுத்துறை  

    பிரெக்ஸிற், பிரான்ஸ்- ஜேர்மன் போன்ற நேட்டோ உறுப்பு நாடுகளுடனான பிரித்தானியாவின் பாதுகாப்பு ஒத்துழைப்

  • பிரித்தானியாவுடன் பாதுகாப்பு ஒத்துழைப்பை தொடர ஐரோப்பா பணியாற்றும்: ஜேர்மன்  

    பிரெக்ஸிற்றின் பின்னரும் பிரித்தானியாவுடனான பாதுகாப்பு ஒத்துழைப்பை தொடர்வதற்கு ஐரோப்பா பணியாற்றி வரு

  • ஐரோப்பிய ஒன்றியத்துடனான ஒற்றுமை நீடிக்கும்: அயர்லாந்து  

    அயர்லாந்துடனான ஐரோப்பிய ஒன்றியத்தின் ஒற்றுமை பிரெக்ஸிற்றின் பின்னரும் தொடர்ந்து நீடிக்கும் என, அயர்ல


#Tags

  • Brexit
  • Brexit Deal
  • Jeremy Corbyn
  • Theresa May
  • ஜெரமி கோர்பின்
  • தெரேசா மே
  • பிரெக்ஸிற்
  • பிரெக்ஸிற் திட்டம்
    பிந்திய செய்திகள்
  • புத்தளத்தில் குப்பைகளைக் கொட்டும் திட்டத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம்!
    புத்தளத்தில் குப்பைகளைக் கொட்டும் திட்டத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம்!
  • பனியில் வரையப்பட்ட மோனாலிசா ஓவியம்!
    பனியில் வரையப்பட்ட மோனாலிசா ஓவியம்!
  • காஷ்மீர் தாக்குதலின் பதிலடிக்கு ஆதரவளிப்போம் – தென்னிந்திய நடிகர் சங்கம்
    காஷ்மீர் தாக்குதலின் பதிலடிக்கு ஆதரவளிப்போம் – தென்னிந்திய நடிகர் சங்கம்
  • குடிநீர் இன்றி அவதியுறும் இரணைதீவு மக்கள்!
    குடிநீர் இன்றி அவதியுறும் இரணைதீவு மக்கள்!
  • ‘இராவணன் திராவிடன்’ நூல் வெளியீடு
    ‘இராவணன் திராவிடன்’ நூல் வெளியீடு
  • முதன்மைச் செய்திகள் (16.02.2019)
    முதன்மைச் செய்திகள் (16.02.2019)
  • முதன்மைச் செய்திகள் (15.02.2019)
    முதன்மைச் செய்திகள் (15.02.2019)
  • மதியச் செய்திகள் (16.02.2019)
    மதியச் செய்திகள் (16.02.2019)
  • சாதனை படைப்பவர்களுக்கு சரித்திரத்தில் இடம் கிடைக்கும்: சிறிநேசன்!
    சாதனை படைப்பவர்களுக்கு சரித்திரத்தில் இடம் கிடைக்கும்: சிறிநேசன்!
  • காலைச் செய்திகள் (16.02.2019)
    காலைச் செய்திகள் (16.02.2019)
  • வானொலி
  • தொலைக்காட்சி

Copyright © 2019 Athavan News. All rights reserved.