பிரித்தானிய இராணுவ வீரர் துருக்கியில் கைது! – உதவி கோரி தாய்நாட்டிற்கு கடிதம்
In இங்கிலாந்து September 17, 2018 10:51 am GMT 0 Comments 1700 by : Farwin Hanaa

துர்கிஸ்தான் நாட்டுப் பயங்கரவாதி என்ற சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டு துருக்கி சிறையில் அடைக்கப்பட்டுள்ள பிரித்தானியாவின் முன்னாள் இராணுவ வீரர், பிரித்தானிய அரசாங்கத்திடம் உதவிகோரியுள்ளார்.
துர்கிஸ்தான் இஸ்லாமிய பயங்கரவாதிகளுடன் இணைந்துகொண்டு சிரியாவில் தாக்குதல் மேற்கொண்டதாகக் குற்றஞ்சாட்டி பிரித்தானிய முன்னாள் இராணுவ வீரர் ஜோ ரொபின்சனை (வயது-25) துருக்கி பொலிஸ் கடந்த வருடம் கைது செய்தது. அதன் பின்னர் அவர் மீது தொடரப்பட்ட வழக்கில் ஏழரை வருட கடூழிய சிறைத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. கடந்த 14 மாத காலமான அவர் சிறைத்தண்டனை அனுபவித்து வருகின்றார்.
ஜோ ரொபின்சனுடன் கைதுசெய்யப்பட்ட அவரது காதலியும் சிறைத்தண்டனை அனுபவித்து வருகின்றார்.
இந்நிலையில் தமக்கு உதவுமாறு பிரத்தானிய அரசாங்கத்திற்கு ஜோ ரொபின்சன் உருக்கமாக கடிதமொன்றை எழுதியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இதேவேளை, குறித்த விடயம் தொடர்பாக பிரித்தானிய வெளிவிவகார அதிகாரிகள் துருக்கி அரசாங்கத்திற்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யவுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.
தண்டனைக் காலத்தின் முதல் 4 மாதங்கள் தன்னை இருட்டறையில் அடைத்து வைத்ததாகவும் 3 மணித்தியாலங்கள் தொடர்ச்சியாக சூரிய ஒளியைக் காணாது அவதிப்படுவதாகவும் தனது காதலியுடன் உரையாட அனுமதிக்கவில்லையென்றும் ஜோ ரொபின்சன் தெரிவித்துள்ளார்.
கடந்த வருடம் காதலியுடன் விடுமுறையைக் கழிக்க சுற்றுலா சென்றபோது தன்னையும் தனது காதலியையும் கைது செய்ததாக ரொபின்சன் குறித்த கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.