பிரித்தானிய தூதரின் பதவி விலகல் கவலையளிக்கிறது: பிரதமர் மே
In இங்கிலாந்து July 10, 2019 3:23 pm GMT 0 Comments 2512 by : shiyani

அமெரிக்காவுக்கான பிரித்தானிய தூதர் கிம் டரோச்-இன் பதவி விலகல் மிகுந்த கவலை அளிப்பதாக பிரதமர் தெரேசா மே தெரிவித்துள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பற்றிய விமர்சனங்களை உள்ளடக்கிய ட்ரொச்-இன் ரகசிய மின்னஞ்சல்கள் பகிரங்கப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து அவர் இன்று பதவி விலகியுள்ளார்.
பிரித்தானிய தூதரின் கருத்துக்களை கடுமையாக விமர்சித்த அமெரிக்க ஜனாதிபதி தூதருக்கு பூரண ஆதரவைத் தெரிவித்த பிரதமர் மே-யையும் கடுமையாக விமர்சித்திருந்தார்.
அமெரிக்காவுக்கான பிரித்தானிய தூதர் பதவியிலிருந்து விலகுவதற்கான நிலை ஏற்பட்டிருப்பது வருத்தத்துக்குரிய விடயமென தெரேசா மே தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவர் ஜெரமி கோர்பின் உட்பட பாராளுமன்ற உறுப்பினர்கள் பலரும் பிரித்தானிய தூதரின் பதவி விலகலுக்கு கவலை தெரிவித்துள்ளனர்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.