பிரிவினைவாதத்திற்கும் தீவிரவாதத்திற்கும் இடமில்லை – பாதுகாப்பு அமைச்சின் செயலாளர்
In இலங்கை January 2, 2021 8:17 am GMT 0 Comments 1510 by : Jeyachandran Vithushan

மலர்ந்துள்ள புத்தாண்டில் பிரிவினைவாதத்திற்கும் தீவிரவாதத்திற்கும் இடமில்லை என பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஜெனரல் கமால் குணரத்ன தெரிவித்துள்ளார்.
ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர், எதிர்வரும் காலங்களில் ஆயுதங்களை எடுக்க எவரையும் அனுமதிக்கப் போவதில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சிறைச்சாலையின் இடக் கட்டுப்பாடுகள் மற்றும் சிறைகளில் கொரோனா வைரஸ் பரவுகின்ற போதும் பெரிய அளவிலான போதைப்பொருள் வலையத்தில் ஈடுபட்டுள்ள கைதிகள் விடுவிக்கப்படவில்லை என கமால் குணரத்ன சுட்டிக்காட்டினார்.
மேலும் வெளிநாட்டிலிருந்து போதைப்பொருள் வலையமைப்பில் ஈடுபட்டவர்களை கைது செய்ய இன்டர்போல் மூலம் 18 சிவப்பு அறிவிப்புகளை வெளியிட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அத்தோடு நாட்டில் சட்டவிரோத போதைப்பொருள் வலையமைப்பைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் புதிய ஆண்டில் மேலும் பலப்படுத்தப்படும் என்றும் கமால் குணரத்ன தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.