பிரெக்சிற் பேச்சுவார்த்தை: பிரஸ்ஸல்ஸுக்கு டேவிஸ் விஜயம்!
In இங்கிலாந்து March 17, 2018 9:16 am GMT 0 Comments 1678 by : Suganthini

அடுத்த கட்ட பிரெக்சிற் பேச்சுவார்த்தையைத் தொடங்கும் நோக்கில், பிரித்தானியாவின் பிரெக்சிற்றுக்குப் பொறுப்பான அமைச்சர் டேவிட் டேவிஸ் பிரஸ்ஸல்ஸுக்கு நாளை (ஞாயிற்றுக்கிழமை) புறப்பட்டுச் செல்லவுள்ளதாக, சர்வதேச ஊடகமொன்று தெரிவித்துள்ளது.
இந்நிலையில் பிரெக்சிற் தொடர்பாக, ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதான பேச்சாளர் மைக்கல் பார்னியரை நாளைமறுதினம் டேவிட் டேவிஸ் சந்தித்துக் கலந்துரையாடவுள்ளார்.
எதிர்வரும் 2019ஆம் ஆண்டு மார்ச் 29ஆம் திகதி ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா வெளியேறவுள்ள நிலையில், இடைமாற்றுக்கால ஒப்பந்தத்தை அடைய வேண்டுமென்று பிரித்தானியா எண்ணுகின்றது.
இதற்கிடையில் பிரெக்சிற் தொடர்பாக, பிரித்தானியாவுக்கும் ஐரோப்பிய ஒன்றியத்துக்குமிடையிலான தமது ஒப்பந்தத்தின் மூலமான வர்த்தக நடவடிக்கைகள் உகந்ததாகவோ அல்லது இலகுவானதாகவோ அமையாதென, ஐரோப்பிய ஒன்றியத் தலைவர் டொனால்ட் டஸ்க டொனால்ட் டஸ்க் எச்சரித்துள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.