மீன்பிடி நிறுவனங்களுக்கு வர்த்தக இழப்பீடுகளை வழங்க பிரித்தானிய அரசாங்கம் நிதி ஒதுக்கீடு!
In இங்கிலாந்து January 20, 2021 8:49 am GMT 0 Comments 1964 by : Litharsan

பிரெக்சிற்றுக்குப் பின்னரான வர்த்தக பிரச்சினைகளால் ஏற்பட்டுள்ள இழப்புக்களைக் குறைப்பதற்கு மீன்பிடி நிறுவனங்களுக்கு ஆதரவளிக்கும் வகையில், 23 மில்லியன் பவுட்ண்ஸ் நிதி ஒதுக்கீட்டை அரசாங்கம் வெளியிட்டுள்ளது.
சிறு மற்றும் நடுத்தர அளவிலான மீன்பிடி வணிகங்களை இலக்காகக் கொண்டு இந்த நிதி வழங்கல் திட்டம் நடைமுறைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஜனவரி முதலாம் திகதி நடைமுறைகள் மாற்றப்பட்டதிலிருந்து பிரித்தானியாவில் இருந்து ஐரோப்பிய ஒன்றியத்திற்கான ஏற்றுமதி கடுமையாக வீழ்ச்சியடைந்துள்ளது.
முக்கியமாக, ஐரோப்பிய ஒன்றியத்திற்குச் செல்வதானால், மீன்பிடி நிறுவனங்கள் கூடுதல் நடைமுறைகள் மற்றும் விண்ணப்பங்களைச் செய்ய வேண்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், மத்திய லண்டனில் மீன் ஏற்றுமதியாளர்கள் இந்தப் பிரச்சினைகளுக்கான தீர்வை வலியுறுத்தி கடந்த திங்களன்று ஆர்ப்பாட்டங்களை நடத்தினர். தங்களின் வாழ்வாதாரம் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளதாக அவர்கள் குறிப்பிட்டனர்.
இதேவேளை, பிரித்தானிய பொருட்களை ஏற்றுமதி செய்வதில் ஏற்பட்டுள்ள சிக்கல்களை பிரதமர் பொரிஸ் ஜோன்சன் ஏற்றுக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதனிடைவிட, கொரோனா நெருக்கடியும் வர்த்தகத் துறையை மோசமாக்கியுள்ள நிலையில், சிரமங்களை எதிர்கொள்ளும் மீன்பிடித் துறையினருக்கு இழப்பீட்டை வழங்க பிரித்தானிய அரசாங்கம் நிதி ஒதுக்கீட்டை மேற்கொண்டுள்ளது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.