பிரெக்ஸிற்: இரண்டாவது மக்கள் வாக்கெடுப்புக்கு ஆதரவு வழங்க தொழிற்கட்சி தீர்மானம்!
In இங்கிலாந்து May 1, 2019 10:26 am GMT 0 Comments 2523 by : shiyani

பிரெக்ஸிற் ஒப்பந்தத்தை மாற்றியமைக்க முடியாதநிலை ஏற்பட்டாலோ அல்லது பொதுத்தேர்தலை கட்டாயமாக்க முடியாவிட்டாலோ இரண்டாவது மக்கள் வாக்கெடுப்புக்கு அழுத்தம் கொடுப்பதற்கு தொழிற்கட்சி தீர்மானித்துள்ளது.
தொழிற்கட்சியின் தேசிய செயற்குழு நேற்று நடத்திய விவாதத்தையடுத்து ஐரோப்பிய தேர்தல் அறிக்கையின் ஒரு பகுதியாக பிரெக்ஸிற் மீதான இரண்டாவது மக்கள் வாக்கெடுப்புக்கான அழுத்தம் கொடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
பிரெக்ஸிற் மீதான இரண்டாவது மக்கள் வாக்கெடுப்புக்கு நிபந்தனைகள் எதுவுமில்லாத ஆதரவை வழங்குமாறு தொழிற்கட்சியின் துணைத்தலைவர் ரொம் வற்சன் உட்பட பல உறுப்பினர்கள் வலியுறுத்தி வந்தனர்.
இந்நிலையில் செயற்குழுவின் நேற்றைய தீர்மானம் கட்சி உறுப்பினர்களை மேலும் கோபத்துக்கு உள்ளாக்கலாமென எதிர்பார்க்கப்படுகிறது. நேற்றைய விவாதத்தின்போது ரொம் வற்சன் வெளிநடப்பு செய்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.