பிரெக்ஸிற் இரண்டாவது வாக்கெடுப்பு குறித்த நிலைப்பாட்டில் மாற்றமில்லை: தொழிற்கட்சி
In இங்கிலாந்து May 1, 2019 4:10 am GMT 0 Comments 2733 by : Risha

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா வெளியேறுவது தொடர்பான இரண்டாவது வாக்கெடுப்பு மீதான தமது நிலைப்பாட்டில் மாற்றமில்லை என தொழிற்கட்சி அறிவித்துள்ளது.
இதேவேளை, பிரெக்ஸிற் விஞ்ஞாபனத்தை ஏற்றுக் கொள்வதற்கும் தொழிற்கட்சி ஒப்புக்கொண்டுள்ளது. நேற்று (செவ்வாய்க்கிழமை) சுமார் ஐந்து மணி நேரம் வரை நீடித்த பேச்சுவார்த்தையை தொடர்ந்து பிரெக்ஸிற் விஞ்ஞாபனத்தை ஏற்றுக்கொள்வதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி, மூன்று நிபந்தனைகளின் அடிப்படையில் பிரெக்ஸிற் வாக்கெடுப்பிற்கு தாம் ஆதரவளிப்பதாக தொழிற்கட்சி வட்டாரங்கள் அறிவித்துள்ளன.
அரசாங்கத்தின் திட்டம் அல்லது தேர்தலில் மாற்றங்களை ஏற்படுத்த முடியாவிடின் பொதுவாக்கெடுப்பொன்றை கட்சி கோரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.