பிரெக்ஸிற் ஒப்பந்தம் மறுபரிசீலனைக்கு உட்படுத்தப்படாது: ஐரோப்பிய ஆணையம்
In இங்கிலாந்து April 23, 2019 1:58 pm GMT 0 Comments 2687 by : shiyani

ஐரோப்பிய ஒன்றியத்துக்கும் பிரித்தானியாவுக்கு இடையில் கடந்த வருடம் ஒப்புக்கொள்ளப்பட்ட பிரெக்ஸிற் ஒப்பந்தம் எக்காரணத்தைக் கொண்டும் மறுபரிசீலனைக்கு உட்படுத்தப்படாது என ஐரோப்பிய ஆணையம் மீண்டு உறுதியாக தெரிவித்துள்ளது.
பிரெக்ஸிற் ஒப்பந்தத்தில் காணப்படும் முக்கிய அம்சமான ஐரிஷ் எல்லைக் கொள்கைக்கு மாற்று ஏற்பாடுகளை பரிசீலனை செய்யுமாறு பிரதமர் தெரேசா மே தனது உதவியாளர்களைக் கேட்டுக்கொண்டுள்ளதாக செய்தியை வெளியாகியுள்ளதையடுத்தே ஐரோப்பிய ஆணையம் இக்கருத்தை வெளியிட்டுள்ளது.
ஐரோப்பிய ஒன்றியத்தால் ஒப்புக்கொள்ளப்பட்ட ஒப்பந்தம் சிறந்ததாக இருப்பதால் அதை மறுபரிசீலனை செய்யமுடியாது என ஐரோப்பிய ஆணையத்தின் தலைமை செய்தித்தொடர்பாளர் மினா ஆண்ட்ரீவா தெரிவித்துள்ளார்.
ஐரோப்பிய ஆணையத் தலைவர் ஜீன்-க்ளூட் ஜுங்கரின் கருத்துக்களை மேற்கோள்காட்டியே மினா ஆண்ட்ரீவா தனது கருத்தை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.