பிரெக்ஸிற் : தங்கத்திலான 50P பிரெக்ஸிற் நாணயம் வெளியீடு
In இங்கிலாந்து January 31, 2020 12:26 pm GMT 0 Comments 3030 by : S.K.Guna

பிரெக்ஸிற் நடைபெறும் இன்றைய நாளை நினைவுபடுத்தி 50P பிரெக்ஸிற் தங்க நாணயம் வெளியிடப்பட்டுள்ளது.
இன்று வெள்ளிக்கிழமை அரசாங்கத்தினால் 50P பிரெக்ஸிற் சிறப்புத் தங்க நாணயங்கள் 1,500 வெளியிடப்பட்டுள்ளன.
விற்பனைக்கு விடப்பட்டுள்ள இந்தத் தங்க நாணயம் ஒன்றின் கிரையச் செலவு £995 ஆகும்.
இருப்பினும் அந்தத் தங்க நாணயங்கள் ஏற்கனவே விற்றுத் தீர்ந்துவிட்டன.
நாணயத்தில் திகதி மற்றும் அனைத்து நாடுகளுடனும் அமைதி, செழிப்பு, நட்பு என்ற வாசகங்கள் பதிக்கப்பட்டுள்ளன.
இதேவேளை பிரெக்ஸிற்றைச் சிறப்பிக்கும் முகமாக மூன்று மில்லியன் 50P பிரெக்ஸிற் நாணயங்கள் இன்று வெள்ளிக்கிழமை முதல் புழக்கத்திற்கு விடப்பட்டுள்ளன.
நன்றி bbc.co.uk
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.