பிரெக்ஸிற் நெருக்கடி: உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் பிரதான கட்சிகளுக்கு பின்னடைவு
In இங்கிலாந்து May 3, 2019 4:34 am GMT 0 Comments 2276 by : Risha

பிரெக்ஸிற் நெருக்கடிகள் காரணமாக பிரித்தானிய உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் பிரதான கட்சிகள் பின்னடைவை சந்தித்து வருகின்றன.
கொன்சவேற்றிவ் மற்றும் தொழிற்கட்சி இவ்வாறு பின்னடைவை சந்தித்துள்ள நிலையில், சிறிய மற்றும் சுயாதீன கட்சிகள் நாடளாவிய ரீதியில் ஆசனங்களை பெற்று வருகின்றன.
பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து கடந்த மார்ச் 29ஆம் திகதியுடன் விலகுவதற்கு திட்டமிட்டிருந்தது. ஆனால், எவ்வித உடன்பாடுகளும் எட்டப்படாத நிலையில் பிரெக்ஸிற் ஒக்டோபர் 31ஆம் திகதிக்கு பிற்போடப்பட்டது.
இவ்வாறான பிரெக்ஸிற் நெருக்கடிகளுக்கு மத்தியில் பிரித்தானியா மற்றும் வட அயர்லாந்தில் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நேற்று இடம்பெற்றது. அதன்படி, சமூகத்தில் தாக்கம் செலுத்தும் தீர்மானம் இயற்றுபவர்களை தெரிவுசெய்யும் வாய்ப்பு நேற்று பொதுமக்களுக்கு வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.