பிரெக்ஸிற் பேச்சுவார்த்தைகளில் ஆளுங்கட்சி விட்டுக்கொடுக்கவேண்டும்: தொழிற்கட்சி
In இங்கிலாந்து April 29, 2019 9:46 am GMT 0 Comments 2596 by : shiyani

ஆளுங்கட்சியான கொன்சர்வேற்றிவ் கட்சிக்கும் எதிர்க்கட்சியான தொழிற்கட்சிக்கும் இடையிலான பிரெக்ஸிற் பேச்சுவார்த்தைகளில் ஆளுங்கட்சி விட்டுக்கொடுத்துப் போகவேண்டுமென தொழிற்கட்சியின் வர்த்தக செய்தித் தொடர்பாளர் ரெபேக்கா லோங் பெய்லி தெரிவித்துள்ளார்.
பிரெக்ஸிற் தொடர்பாக பாராளுமன்றத்தில் நிலவும் முட்டுக்கட்டையைத் தீர்த்து கருத்தொற்றுமையைக் கண்டுபிடிப்பதற்காக இருகட்சிகளும் பலவாரங்களாக பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்துவருகின்றன.
இதுவரையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தைகள் ஆக்கப்பூர்வமானவையாக அமைந்ததாகவும் ஒருமித்த கருத்தொன்றை எட்டுவதற்கு இருதரப்பினரும் ஆர்வமாக உள்ளதாகவும் தொழிற்கட்சியின் செய்தித்தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
ஆனாலும் சுங்க ஒன்றியம் போன்ற முக்கிய விடயங்களில் அரசாங்கம் விட்டுக்கொடுத்துப் போவதற்கு சம்மதிக்கவேண்டும் எனவும் இந்தவாரம் இடம்பெறவுள்ள பேச்சுவார்த்தைகளில் முன்னேற்றம் காணமுடியுமென தாம் நம்புவதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும் பிரெக்ஸிற் பேச்சுவார்த்தைகளை தொழிற்கட்சி இழுத்தடிப்பதாக கொன்சர்வேற்றிவ் கட்சியால் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கு ரெபேக்கா லோங் பெய்லி மறுப்புத் தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.