பிரெக்ஸிற் பேச்சுவார்த்தைகள் முறியடிக்கப்படவில்லை: தொழிற்கட்சி
In இங்கிலாந்து April 17, 2019 1:40 pm GMT 0 Comments 2507 by : shiyani

அரசாங்கத்துக்கும் எதிர்க்கட்சிக்கும் இடையிலான பிரெக்ஸிற் பேச்சுவார்த்தைகள் முறியடிக்கப்பட்டதாக வெளிவந்த செய்தி உண்மையானதில்லையென தொழிற்கட்சி தெரிவித்துள்ளது.
அமெரிக்காவுடனான வர்த்தக ஒப்பந்தம் உட்பட்ட பிரெக்ஸிற்றுக்கு பிந்தைய கட்டுப்பாடுகள் தொடர்பான கொன்சர்வேற்றிவ் கட்சியின் நிலைப்பாட்டின் காரணமாக பேச்சுவார்த்தைகள் நிறுத்தப்பட்டதாக தொழிற்கட்சி தலைவர் ஜெரமி கோர்பினை மேற்கோள்காட்டி கார்டியன் பத்திரிகை செய்தி வெளியிட்டிருந்தது.
ஐரோப்பிய சந்தை குறித்தும் சுற்றுச்சூழல் மற்றும் நுகர்வோர் பணியிட உரிமைகள் குறித்தும் அரசாங்கத்துடன் உடன்பாடொன்றை இதுவரை எட்ட முடியவில்லையென ஜெரமி கோர்பின் தெரிவித்திருந்தார்.
கோர்பினின் இக்கருத்தைச் சுட்டிக்காட்டி ஆளுங்கட்சிக்கும் எதிர்க்கட்சிக்கும் இடையிலான பிரெக்ஸிற் பேச்சுவார்த்தைகள் முடிவுக்கு வந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
ஆனாலும் மேலதிகப் பேச்சுவாத்தைகளை அடுத்த வாரங்களில் முன்னெடுப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளபோது பேச்சுவார்த்தைகள் நிறுத்தப்பட்டுள்ளதாக செய்தி வெளியிடுவது சரியானதல்ல என தொழிற்கட்சியின் செய்தித்தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.