பிரேசிலில் இடதுசாரி வேட்பாளரின் ஆதரவாளர்கள் பேரணி!
In உலகம் October 24, 2018 8:21 am GMT 0 Comments 1430 by : Farwin Hanaa
பிரேசிலில் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை இடம்பெறவிருக்கும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடவுள்ள வேட்பாளர் ஃபெனான்டோ ஹெடேட், அவருடைய ஆதாரவாளர்களுடன் பாரிய பேரணியொன்றை மேற்கொண்டுள்ளார்.
தலைநகர் றியோ டீ ஜெனீரோவில் இடம்பெற்ற பாரிய பேரணியில் இடதுசாரிக் கட்சியைச் சேர்ந்த ஜனாதிபதி வேட்பாளர் ஃபெனான்டோ ஹெடாட் தனது ஆதாரவாளர்களுடன் இணைந்து நேற்று (செவ்வாய்க்கிழமை) கலந்து கொண்டுள்ளார்.
பிரேசில் நாட்டின் ஜனாதிபதித்தேர்தலில் போட்டியிடும் வலதுசாரிக் கட்சியைச் சேர்ந்த ஜயிர் பொல்சொனரோவை இடதுசாரி வேட்பாளர் வெற்றி கொள்வாரெனவும் பேரணியில் கலந்து கொண்டவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
ஃபெனான்டோ ஹெடாட் (வயது-63), ஓய்வுபெற்ற இராணுவத் தளபதி ஆவார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.