பிரேசிலில் மலைக்குன்றில் இருந்து கீழே விழுந்து பேருந்து விபத்து – 19 பேர் உயிரிழப்பு
In உலகம் January 27, 2021 3:33 am GMT 0 Comments 1444 by : Dhackshala

பிரேசில் நாட்டில் பேருந்தொன்று மலைக்குன்றில் இருந்து கீழே விழுந்து விபத்துக்குள்ளானதில் 19 பயணிகள் உயிரிழந்தனர்.
பரானா மாகாணத்தில் 53 பயணிகளை ஏற்றிக்கொண்டு பயணித்த பேருந்து, திடீரென நிலைதடுமாறி அருகில் இருந்த மலைக்குன்றில் இருந்து கீழே விழுந்து விபத்துக்குள்ளானது.
இதில் பேருந்தில் பயணம் செய்த 19 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். அத்தோடு, பலர் காயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இதனையடுத்து, இந்த விபத்து குறித்து பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ள நிலையில், சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார், மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.