பீட்ரூட் ஜாம்
November 4, 2018 10:42 am GMT

தேவையான பொருட்கள்
பீட்ரூட் – 100 கிராம், சீனி – 100 கிராம், தேன் – ஒரு மேசைக்கரண்டி, ஏலக்காய் – 2, முந்திரி – 8, நெய் – ஒரு மேசைக்கரண்டி
செய்யும்முறை
பீட்ரூட்டை சுத்தம் செய்து தோல் சீவி வைத்துக் கொள்ளவும். ஏலக்காயை பொடி செய்து வைத்துக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் நறுக்கின பீட்ரூட் துண்டுகளை போட்டு குக்கரில் வைத்து ஒரு விசில் வரும் வரை வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.
வெந்ததும் அதை மிக்ஸியில் போட்டு அரைத்து விழுதாக எடுத்துக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் சீனியை போட்டு 4 மேசைக்கரண்டி தண்ணீர் ஊற்றி கரைய விடவும். சீனி கரைந்ததும் அரைத்த பீட்ரூட் கலவையை ஊற்றி தீயை மிதமாக வைத்து கிளறி விட்டு மூடி வைக்கவும்.
5 நிமிடம் கழித்து திறந்து மேலே ஒரு மேசைக்கரண்டி நெய் ஊற்றி கிளறி விடவும்.
அதன் பிறகு இந்த பீட்ரூட் கலவையில் வறுத்த முந்திரி, திராட்சையை சேர்க்கவும்.
அதன் பிறகு 5 நிமிடம் கழித்து பொடி செய்த ஏலக்காயினை சேர்த்து அடுப்பிலிருந்து இறக்கி வைக்கவும். இறுதியாக அதில் தேனை ஊற்றி கிளறி விடவும்.
சுவையான பீட்ரூட் ஜாம் ரெடி.
-
கம்பங்கூழ்
தேவையான பொருட்கள் கம்பு – ஒரு கப் கூழ் கரைக்...
-
நண்டு மசாலா குழம்பு
தேவையான பொருட்கள் நண்டு – 6, தயிர் – ஒ...