புதிய அமைச்சரவை தொடர்பிலான கேள்விக்கு விளக்கமளிக்கவுள்ளார் ஜனாதிபதி மக்ரோன்!
In ஐரோப்பா October 16, 2018 5:19 pm GMT 0 Comments 1382 by : ஜெயச்சந்திரன் விதுஷன்

பிரான்ஸின் நிர்வாகப் பணியை சரிவர நிறைவேற்றும் முகமாகவும், பலர் இராஜினாமா செய்துள்ள நிலையில் அவர்களின் வெற்றிடங்களை மீள்நிரப்பும் நடவடிக்கைகளையும் ஜனாதிபதி இமானுவேல் மக்ரோன் மேற்கொண்டு வருகின்றார்.
இந்நிலையில் இமானுவல் மக்ரோனும், எதுவார் பிலிப்பும் இணைந்து உருவாக்கி உள்ள புதிய அரசாங்கம் இன்று (செவ்வாய்க்கிழமை) அறிவிக்கப்பட்டது.
இது தொடர்பான கேள்விகளிற்கு இன்று இரவு தொலைக்காட்சியில் இமானுவேல் மக்ரோன் பதிலளிக்க உள்ளார் என ஜனாதிபதி மாளிகை தெரிவித்துள்ளது.
இராஜினாமா செய்வார் என எதிர்பார்க்கப்பட போதிலும் புதிய அமைச்சரவையிலும் எதுவர் பிலிப் பிரதமராக நீடிக்கின்றார்.
மேலும் பிரான்ஸின் ஆளுங்கட்சித் தலைவர் கிறிஸ்டோஃப் கெஸ்டனரை உள்துறை அமைச்சராக ஜனாதிபதி இமானுவேல் மக்ரோன் நியமித்துள்ளார்.
பல பதவிகளில் இருந்தவர்கள், அமைச்சர்களாகவும், இணை அமைச்ர்களாகவும், அமைச்சரவைப் பிரதிநிதிகளாகவும் பதவி வழங்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.