புதிய அமைச்சர்களின் கடமைகள் தொடர்பில் வர்த்தமானி வெளியீடு
In ஆசிரியர் தெரிவு November 9, 2018 6:31 am GMT 0 Comments 1465 by : Yuganthini

புதிதாக நியமிக்கப்பட்டுள்ள அமைச்சர்களின் கடமைகள் தொடர்பில் அதிவிஷேட வர்த்தமானியொன்று வெளியிடப்பட்டுள்ளது.
அரசியலமைப்பு சீர்த்திருத்தத்தின் 43ஆவது திருத்த சட்டத்தின் அடிப்படையிலேயே இவர்களை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நியமித்துள்ளார்.
இந்நிலையில் அவ்வமைச்சர்களின் கடமைகள் தொடர்பில் 2096/ 17 என்ற அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன புதிய பிரதமராக மஹிந்த ராஜபக்ஷவை நியமித்தமை தொடர்ந்து நாட்டின் அரசியலில் பல்வேறு சிக்கல்கள் தோன்றியுள்ளன.
இதனால் பிரதமர் விவகாரத்தில் முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் தற்போதைய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவும் நாடாளுமன்றத்தில் தங்களது பெரும்பான்மையை நிரூபிப்பதன் ஊடாக தீர்வை காணமுடியுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆகையால், பெரும்பான்மையை அதிகரிக்கும் நடவடிக்கையில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஐக்கிய தேசிய கட்சி ஆகியன ஈடுபட்டு வருகின்றன.
இந்நிலையில் ஜனாதிபதி, புதிய அமைச்சர்களை நியமித்து தமது பலத்தை வலுப்படுத்தும் நடவடிக்கையில் ஈடபட்டு வருவதாக அரசியல் அவதானிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.