புதிய அரசியலமைப்பு தொடர்பான வரைபு நகல் விரைவில்!
புதிய அரசியலமைப்பு தொடர்பான வரைபு நகல் விரைவில் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படும் என சபை முதல்வரும் அமைச்சருமான லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.
தற்போது நடைபெற்று வரும் நாடாளுமன்ற அமர்வில் அவர் இவ்விடயத்தை அறிவித்ததாக எமது நாடாளுமன்ற செய்தியாளர் தெரிவித்தார்.
பிரதமர் ரணில் தலைமையில் நேற்று நடைபெற்ற வழிநடத்தில் குழுவில் இவ்விடயம் தொடர்பாக தீர்மானிக்கப்பட்டதாக லக்ஷ்மன் கிரியெல்ல மேலும் குறிப்பிட்டார்.
அந்தவகையில் விரைவில் குறித்த நகல் வரைபு சமர்ப்பிக்கப்பட்டு, விவாதம் நடத்தப்படுமென அறிவித்துள்ளார்.
அரசியல் யாப்பு உருவாக்கம் தொடர்பில் கடந்த காலங்களில் பல கருத்துக்கள் முன்வைக்கப்பட்டு வந்தன. நல்லாட்சி அரசாங்கத்தின் ஆட்சிக்காலத்தில் புதிய அரசியலமைப்பை கொண்டுவர வேண்டும் என்பதில் தமிழ் தரப்புக்கள் உறுதியாக உள்ளதோடு, அதன் பிரகாரம் அமைக்கப்பட்ட வழிநடத்தல் குழுவின் இடைக்கால அறிக்கையும் நாடாளுமன்றில் சமர்க்கப்பட்டுள்ளது.
புதிய அரசியல் யாப்பின் ஊடாக, தமிழ் மக்களின் பிரச்சினைக்கு தீர்வு வழங்கப்படுமென அரசாங்கமும் குறிப்பிட்டிருந்த நிலையில், இன்றைய அறிவிப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்துள்ளது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.