புதிய உறுப்பினர்களுடன் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு இன்று கூடுகிறது
In இலங்கை December 17, 2020 3:06 am GMT 0 Comments 1282 by : Dhackshala

புதிதாக நியமிக்கப்பட்ட உறுப்பினர்களுடன் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு இன்று (வியாழக்கிழமை) கூடுகின்றது.
புதிதாக நியமிக்கப்பட்ட தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் கடந்த வாரம் தமது கடமைகளை பொறுப்பேற்றிருந்தனர்.
அதன் பின்னர் நடைபெறும் இன்று நடைபெறவுள்ள முதலாவது கூட்டத்தின்போது முக்கிய விடயங்கள் கலந்துரையாடப்படவுள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர், சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா தெரிவித்தார்.
அடுத்த வருடத்துக்கான தேர்தல் இடாப்பை தயாரித்தல் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பிலும் இன்று கலந்துரையாடப்படவுள்ளது.
இதனைத்தவிர, முதல் வாக்குப்பதிவு, வெளிநாடுகளில் தங்கியுள்ள இலங்கையர்களுக்கு வாக்களிக்கும் சந்தர்ப்பத்தினை ஏற்படுத்திக் கொடுத்தல், தேர்தல் செலவுகளை கட்டுப்படுத்தல் உள்ளிட்ட நடவடிக்கைகளுக்காக நாடாளுமன்ற அனுமதியை பெறுவது தொடர்பிலும் இன்று நடைபெறவுள்ள கூட்டத்தில் கலந்துரையாடப்படவுள்ளது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.