புதிய ஐரிஷ் கடல் வர்த்தக எல்லை செயற்படத் தொடங்கியது!
In இங்கிலாந்து January 1, 2021 9:13 am GMT 0 Comments 1794 by : Anojkiyan

வடக்கு அயர்லாந்திற்கும் இங்கிலாந்தின் மற்ற பகுதிகளுக்கும் இடையில், ஒரு புதிய வர்த்தக எல்லை செயற்படத் தொடங்கியுள்ளது. நேற்று (வியாழக்கிழமை) 23:00 மணிக்கு இயங்கத் தொடங்கியது.
கிரேட் பிரிட்டனில் இருந்து வடக்கு அயர்லாந்தில் நுழையும் பெரும்பாலான வணிகப் பொருட்களுக்கு இப்போது சுங்க அறிவிப்பு தேவைப்படுகிறது.
இருப்பினும், பிரித்தானிய அரசாங்கம் பொதிகளுக்கு மூன்று மாத சலுகை காலம் அறிவித்தது. அதாவது ஒன்லைன் சில்லறை விற்பனையாளர்கள் அனுப்பியவர்களுக்கு குறைந்தது ஏப்ரல் வரை விலக்கு அளிக்கப்படும்.
தொற்றுநோய்களால் பல கடைகள் மூடப்பட்டிருக்கும் நேரத்தில் விநியோகங்களுக்கு இடையூறு ஏற்படுவதைத் தவிர்க்க சலுகை காலம் அவசியம் என புரிந்துக்கொள்ளப்படுகின்றது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.