புதிய கல்விக் கொள்கை: சூர்யாவின் கருத்துக்கு பா.ஜ.க.கடும் கண்டனம்
In இந்தியா July 16, 2019 9:51 am GMT 0 Comments 1784 by : Yuganthini
இந்தியாவின் புதிய கல்விக்கொள்கையை கடுமையாக விமர்சித்து நடிகர் சூர்யா வெளியிட்டுள்ள கருத்துக்கள், தற்போது தமிழக அரசியல் களத்தில் பெரும் விவாதப் பொருளாக மாற்றமடைந்துள்ளது.
நீட் போன்ற நுழைவுத் தேர்வுகளினால் அரச பள்ளி மாணவர்களின் வாய்ப்பு பறிக்கப்படுகின்றது எனவும் புதிய கல்விக்கொள்கை குறித்தும் அண்மையில் நடைபெற்ற நிகழ்வொன்றில் சூர்யா, கடுமையாக விமர்சித்துள்ளார்.
இந்நிலையில், சூர்யாவின் கருத்துக்கு பா.ஜ.க. சார்பில் கடுமையான எதிர்ப்புக்கள் வெளியிடப்பட்டுள்ளன.
அதாவது சூர்யாவின் பேச்சு, வன்முறையைத் தூண்டும் விதமாக அமைந்துள்ளதாக பா.ஜ.க.தேசிய செயலாளர் ஹெச்.ராஜா விமர்சித்துள்ளார்.
இதுபோன்ற பேச்சுகளின் ஊடாக மக்களை ஏமாற்றுவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
அதேபோன்று மாநில தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், “புதிய கல்விக்கொள்கை குறித்து எதுவும் தெரியாதவர்களெல்லாம் கருத்து வெளியிடுகின்றனர்
அந்தவகையில் சூர்யா போன்ற நடிகர்கள், தங்களின் பட விளம்பரத்துக்காகவும் அரசியலில் நுழைவதற்காகவும் இவ்வாறான கருத்துக்களை வெளியிடுகின்றனர்” என குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையில் புதிய கல்விக்கொள்கை விவகாரத்தில் மாநில அரசு ஒருபோதும் தமது உரிமைகளை விட்டுக்கொடுக்காதென அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
இதேவேளை மத்திய அரசின் புதிய கல்விக்கொள்கைக்கு தமிழ்நாட்டிலுள்ள எதிர்க்கட்சிகள் தொடர்ந்து எதிர்ப்பினை வெளியிட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.