புதிய கொரோனா வைரஸ்: கொழும்பு மக்களுக்கு முக்கிய அறிவிப்பு
In இலங்கை February 17, 2021 5:45 am GMT 0 Comments 1425 by : Yuganthini

புதிய கொரோனா வைரஸ் வேகமாக பரவக்கூடியது. ஆகையினால் தேவையற்ற பயணத்தைத் மக்கள் அனைவரும் தவிர்த்துக்கொள்ள வேண்டுமென கொழும்பு நகராட்சி மன்றத்தின் தலைமை மருத்துவ அதிகாரி வைத்தியர் ருவன் விஜேமுனி தெரிவித்துள்ளார்.
ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த சந்திம ஜீவந்தர என்பவரினால் அண்மையில் கண்டுபிடிக்கப்பட்ட புதிய வைரஸ், கொழும்பு நகரத்தில் பரவியுள்ளதாகவும் டாக்டர் ருவான் விஜெமுனி சுட்டிக்காட்டியுள்ளார்.
ஆகவே திருமண நிகழ்வுகள் மற்றும் பிறந்தநாள் விழாக்கள், இரவு விடுதிகளும் நிறுத்தப்பட வேண்டும்.மேலும் மக்கள், நெரிசலான இடங்களிலிருந்து முடிந்தவரை விலகி இருக்க வேண்டும் எனவும் வைத்தியர் ருவன் விஜேமுனி வலியுறுத்தியுள்ளார்.
இவ்வாறு செயற்படாத பட்சத்தில் கொழும்பு நகரத்தில் புதிய கொரோனா வைரஸ் தொற்றின் பாதிப்பு மேலும் அதிகரிப்பதற்கு வாய்ப்புக்கள் அதிகமாக உள்ளதெனவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.