புதிய செயலியை பாதியில் நிறுத்தியது ஃபேஸ்புக்

ஃபேஸ்புக் நிறுவனம் உருவாக்கி சில பயனர்களுக்கு மட்டும் வழங்கப்பட்டு வந்த புதிய செயலியான லொல் செயலியை (Lol App) அந்நிறுவனம் நிறுத்தயுள்ளது.
சமூக வலைத்தளத்தை மேலும் வளர்க்கவும், பயனர் எண்ணிக்கையை அதிகப்படுத்தவும் ஃபேஸ்புக் புதிய செயலியை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டுவருகிறது.
அதன் ஒரு திட்டமாக லொல் என்ற பெயரில் உருவாக்கிய செயலியில் பயனரை மகிழ்விக்கும் நோக்கில் Memes, Gif போன்றவை இடம்பெற்றிருக்கும்.
முதற்கட்டமாக குறைந்தளவு பயனர்களுடன் சோதனை முறையில் ஆரம்பிக்கப்பட்ட லொல் திட்டம் நீண்ட நேரம் நிலைத்திருக்கவில்லை. லொல் செயலியை ஃபேஸ்புக் 100 மாணவர்களுடன் ஆரம்பித்தது. பின்னர் செயலியில் ஃபேஸ்புக் ஊழியர்களில் 100 இளைஞர்களை சேர்த்துக் கொண்டது.
தற்போது வெளியாகியுள்ள தகவல்களின் படி ஃபேஸ்புக் லொல் செயலியை வெளியிடும் திட்டத்தை நிறுத்தியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, மெசேஞ்சர் கிட்ஸ் (Messanger Kids) செயலியை மேம்படுத்தும் பணிகளில் ஃபேஸ்புக் ஈடுபட்டுள்ளது. இந்த செயலி 13 வயதுக்கு உட்பட்டோர் பயன்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.