புதிய வீரியமிக்க கொரோனா வைரஸ் குறித்து எய்ம்ஸ் வைத்தியசாலை எச்சரிக்கை
In இந்தியா December 31, 2020 3:22 am GMT 0 Comments 1218 by : Dhackshala

கொரோனா வைரஸ் சில நாடுகளில் புதிய மாற்றங்கள் கொண்டு வீரியமிக்கதாகப் பரவி வருவதாக எய்ம்ஸ் வைத்தியசாலையின் இயக்குனர் டாக்டர் ரந்தீப் குலேரியா தெரிவித்துள்ளார்.
பிரித்தானியாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள வீரியம் மிக்க வைரஸ் அதிகளவில் பரவக்கூடியதாக உள்ளதென்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனவேதான் அரசு தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு விமானப்போக்குவரத்துக்கும் தடை விதித்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.
மேலும் இந்தியா கொரோனாவுக்கு எதிரான யுத்தத்தில் சிறப்பான முன்னேற்றம் கண்டுள்ளதாகவும் கொவிட் பாதிப்புகள் குறைந்து வருவதாகவும் கூறியுள்ள அவர், குணமடைந்தோரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருவதாக தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.