புதுச்சேரியில் கடைகள் இன்று மாலை முதல் மூடப்படும் என அறிவிப்பு!
In இந்தியா November 24, 2020 4:52 am GMT 0 Comments 1413 by : Krushnamoorthy Dushanthini

நிவர் புயலை எதிர்கொள்ள புதுவையில் தொழிற்சாலைகள், கடைகள் இன்று மாலை முதல் மூடப்படும் என்று முதலமைச்சர் நாராயணசாமி அறிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிவித்தலில், “ வியாபார நிறுவனங்களை இன்று (செவ்வாய்க்கிழமை) மாலை முதல் நாளை வரை மூட உத்தரவிட்டுள்ளோம்.
தொழிலாளர்கள் வேலைக்கு செல்ல வேண்டாம் என்று தொழிற்சாலைகளுக்கும், வியாபார நிறுவனங்களுக்கும் உத்தரவிட்டுள்ளோம். வியாபார நிறுவனங்களை மூட வலியுறுத்தி உள்ளோம். 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்கள் சிறப்பு வகுப்புக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தி உள்ளோம்.
உயிர் மற்றும் பொருட் சேதம் ஏற்படாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. புயலை எதிர் கொள்ள அனைத்து துறைகளும் 24மணி நேரமும் செயற்பட தயார் நிலையில் உள்ளது” என அறிவித்துள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.