புதுவருட கடமைகளை ஆரம்பிக்கும் நிகழ்வு மட்டக்களப்பு மாவட்ட செயலகத்திலும் இடம்பெற்றது

புதுவருடத்தில் அரச உத்தியோகத்தர்கள் கடமைகளை பொறுப்பேற்கும் நிகழ்வு இன்று(வெள்ளிக்கிழமை) காலை நடைபெற்றது.
காலை 9.00 மணிக்கு சுபவேளையில் நாடளாவிய ரீதியில் அலுவலகங்களில் கடமைகளை ஆரம்பித்தனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தின் பிரதான நிகழ்வு மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.
மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் கே.கருணாகரன் தலைமையில் தேசிய கொடியேற்றப்பட்டு நாட்டுக்காக உயிர் நீர்த்தவர்களுக்கான இரண்டு நிமிட மௌ வணக்கத்துடன் புதிய ஆண்டுக்கான சத்தியப்பிரமானம் செய்யும் நிகழ்வு நடைபெற்றது.
தற்போது ஏற்பட்டுள்ள கொரோனா அச்சுறுத்தலில் இருந்து பாதுகாப்பது தொடர்பில் வைத்தியர் ஆர்.தர்சினியினால் கொரோனா பாதுகாப்பு தொடர்பான சிறைப்புரை நிகழ்த்தப்பட்டது.
அதனை தொடர்ந்து புதிய ஆண்டில் அரச உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் முன்னெடுக்கவேண்டிய நடைமுறைகள், சுபீட்சமான நாட்டினை கட்டியெழுப்புவதில் அரசாங்க உத்தியோகத்தரின் பங்கு தொடர்பில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் கே.கருணாகரன் சிறப்புரையாற்றினார்.
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக சுகாதார நடைமுறைகளை பின்பற்றியவாறு குறித்த நிகழ்வு நடைபெற்றது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.