புதூர் நாகதம்பிரான் ஆலய இராஜகோபுரத்திற்கு அடிக்கல்
வரலாற்று சிறப்புமிக்க புதூர் நாகதம்பிரான் ஆலயத்திற்கு, 108 அடி நவதள இராஜகோபுரம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டிவைக்கப்பட்டுள்ளது.
ஆலய பிரதம குருக்களின் தலைமையில் இன்று (வியாழக்கிழமை) காலை இந்நிகழ்வு இடம்பெற்றது.
இவ்விழாவில் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், வட. மாகாண சபை உறுப்பினர் ப.சத்தியலிங்கம், ம.தியாகராசா மற்றும் ஆலய நிர்வாகிகள், பக்தர்கள் எனப் பலரும் கலந்துகொண்டிருந்தனர்.
400 ஆண்டுகள் பழைமைவாய்ந்த புதூர் நாகதம்பிரான் கோயில் பல சிறப்புக்களை கொண்டதாகும். வவுனியா மாவட்டத்தில் அதிக உயரமுள்ள இராஜகோபுரமாக நாகதம்பிரான் ஆலயத்தின் இராஜகோபுரம் அமையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.